Marknadens största urval
Snabb leverans

Böcker av Ki Va Jagannathan

Filter
Filter
Sortera efterSortera Populära
  • av Ki Va Jagannathan
    280,-

    "இப்போது பட்டத்துக்கு வந்திருக்கும் மன்னன் இளமையுடையவன் என்று சொல்கிறார்களே!" "சொல்கிறது என்ன? இளமையை உடையவன்தான். அதனால் என்ன? சிங்கத்தின் குட்டியென்றால் யானையை வெல்லாதா?" "எத்தனையோ வீரச் செயல்களைச் செய்து தம் வெற்றியைப் பிற நாடுகளிலும் நாட்டிய மன்னர்கள் பிறந்த குலம் ஆயிற்றே, சோழகுலம்! இந்தக் குலத்தின் பெருமைக்கும் சோழ நாட்டின் சிறப்புக்கும் ஏற்றபடி ஆட்சி புரியும் ஆற்றல் இந்த இளைய மன்னனுக்கு இருக்குமா?" "பழங்காலத்தில் சோழ குலத்தில் கதிரவனாக விளங்கிய கரிகாலன் இன்னும் இளமையில் அரசை ஏற்றான். அவன் பெற்ற புகழை யார் பெற முடியும்? இன்றும் சோழ நாடு காவிரியினால் வளம் பெற்று வாழ்கிறதற்குக் காரணம் கரிகாலன் கட்டுவித்த கரைதானே? நாம் வாழ்கிறோமே, இந்த உறையூர்; இந்நகரம் இவ்வளவு அழகாகவும் சிறப்பாகவும் இருப்பதற்கு அந்த மன்னர் பிரான்தானே காரணம்?"

  • av Ki Va Jagannathan
    270,-

    கலைமகள் ஆசிரியர் உயர்திரு கி. வா. ஜகந்நாதன் அவர்களைத் தமிழ் உலகம் நன்றாக அறியும். இணையற்ற ஆசிரியராக விளங்கும் அவர்கள் அவ்வப்போது குழந்தைகளுக்காக எழுதிய கதைகள் இவை. தமிழ்த் தாத்தா டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்களுடைய அன்புக்குகந்த மாணவராகப் பயின்ற ஆசிரியர் அவர்கள் அந்த மரபிலேயே தமிழ் மணத்தைப் பெரியவர் களுக்கு மட்டுமல்ல, இளைஞர்களுக்கும், மாணவர்களுக்குங்கூடப் பல ஆண்டுகளாகப் பரப்பி வருகிறர்கள். தித்திக்கும் இந்தக் கதைகளை வெளியிடுவதில் மிக மிகப் பெருமையடைகிறோம். குழந்தைகள் இவற்றை விருப்புடன் சுவைப்பார்கள் என்பதை நன்கு அறிவோம். மேலும் ஆசிரியர் அவர்களுடைய இன்னோரு தொகுப்பு விரைவில் வெளிவரும் என்ற செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம்.

  • av Ki Va Jagannathan
    300,-

    காலத்தில் இப்படி விளங்கியது என்று சொல்வது வாழ்க்கை வரலாறு பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளே அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். விளையும் பயிர் முளையிலே தெரியும் என்ற பழமொழியை உண்மைப் படுத்தும் நிகழ்ச்சிகளைப் பெரும்பாலும் அந்த வரலாறுகளிலேக் காணலாம். சில பெரியவர்களின் இளமைப் பருவ நிகழ்ச்சிகளை விரித்து எழுதினால் குழந்தைகள் படித்து இன்புறுவார்கள் என்ற எண்ணத்தோடு மகாத்மா காந்தியடிகள் முதலிய ஏழு பேர்களின் வரலாற்றி லிருந்து அவற்றைத் தொகுத்தேன். ஒவ்வொரு பெரியவரைப்பற்றியும் ஒவ்வொரு கட்டுரையாகக் 'கண்ண'னில் எழுதி வந்தேன். குழந்தைகளுக்குச் சுவையூட்டும் வகையில் தெளிவான சின்னஞ் சிறு வாக்கியங்களில் எழுதவேண்டும் என்பது என் விருப்பம். ஒருவாறு அந்த விருப்பத்தை நிறைவேற்ற முயன்றேன். அப்படி எழுதியவற்றின் தொகுப்பே இந்தப் புத்தகம். 'கண்ண'னில் வரும்போது குறிப்பிட்ட அளவுக்குள் அடங்கவேண்டி யிருந்தமையால், கிடைக்கும் செய்திகளை யெல்லாம் பயன்படுத்திக்கொண்டு விரிவாக எழுத முடியவில்லை. அப்படி எழுதினால் ஒவ்வொருவரையும் பற்றி ஒவ்வொரு புத்தகமே எழுதிவிடலாம்.

  • av Ki Va Jagannathan
    270,-

    இந்தப் புத்தகத்தில் குழந்தைகள் படித்து மகிழ்வதற்கு உரிய பதினைந்து கதைகள் அடங்கியிருக்கின்றன. இந்தக் கதைகள் புலவர்களுடைய ஆற்றலும், அறிவுடைய பெண்களின் சாமார்த்தியமும், மெய் பேசுதல், தாயினிடம் அன்பு வைத்தல், விடா முயற்சி செய்தல், தர்மம் தலைகாத்தல் முதலிய நீதிகளைப் புலப்படுத்துகின்றன. தமிழ்ப் புலவர்களின் அறிவாற்றலை அறிந்து விளங்கும் வகையில் சில கதைகள் உள்ளன. இவை குழந்தைகள் படித்து இன்புறுவதற்கும், முதியோர் கல்வி கற்கும் போது அவர் படித்து மகிழ்வதற்கும் இவை பயன்படும். இந்தக் கதைகளில் சில பல காலமாகத் தமிழ் நாட்டில் வழங்கி வரும் வரலாறுகளை அடிப்படையாகக் கொண்டவை.

  • av Ki Va Jagannathan
    300,-

    சங்கப் பாடல்களின் வாயிலாகப் பல புலவர்களையும் புரவலர்களையும் நாம் தெரிந்துகொள்ளுகிறோம். சிந்தனைச் செல்வமும் கற்பனை வளமும் படைத்த புலவர்கள் பண்பிலே சிறந்த சான்றோர்களாகவும் விளங்கினார்கள். அதனால் பண் புடைய மக்களை அணுகி அவர்களுடைய இயல்புகளைக் கண்டு மகிழ்ந்து பாராட்டினார்கள். அவர்களுடைய பாராட்டைப் பெற்ற குரிசில்கள் இறந்தும் இறவாதவர்களாகப் புகழுடம்புடன் விளங்குகிறார்கள். அவர்களுக்குள் சிறந்தவர்களாக ஏழு பேரைத் தமிழிலக்கியம் எடுத்துச் சொல்கிறது. ஏழு வள்ளல்கள் என்று அவர்களை ஒருங்கே சொல்வது மரபாகி விட்டது. பிற்காலத்தில் வேறு இரண்டு வள்ளல் வரிசைகளைப் புராணங்களிலிருந்து எடுத்துக் கோத்து விட்டதனால் இவர்களைக் கடையெழு வள்ளல்கள் என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த ஏழு வள்ளல்களே வரலாறும் இலக்கியமும் காட்டும் மக்கள்; இவர்களுடைய வரலாற்றுக்கு இலக்கிய ஆதாரங்கள் இருக்கின்றன. இந்த ஏழு வள்ளல்களிலும் தலைசிறந்தவன் பாரிவேள். இன்று பிரான்மலை என்று வழங்கும் பறம்பு மலையில் வாழ்ந்தவன் அவன். புலவர் பெருமக்களிற் சிறந்த கபிலரும் பாரியும் ஆருயிர் நண்பர்கள். கபிலருடைய பாட்டுக்களில் பாரி இன்றும் வாழ்கிறான். அவனுடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளப் புறநானூற்றிலுள்ள பல பாடல்களும் சில தனிப் பாடல்களும் உதவியாக இருக்கின்றன.

Gör som tusentals andra bokälskare

Prenumerera på vårt nyhetsbrev för att få fantastiska erbjudanden och inspiration för din nästa läsning.