Om ஸ்பாட்'சி எனும் பிரெஞ்சு
ஸ்பாட்'சி எனும் பிரெஞ்சுக்கார நாய்க்குட்டி அவர் ஒரு குறும்புக்கார நாய்க்குட்டி (SpotZ the Frenchie - Tamil Edition): ஸ்பாட்'சி எனும் பிரெஞ்சுக்கார நாய்க்குட்டி ஒரு சாதாரண நாய் அல்ல. அவர் ஒரு மிகவும் பெருந்தன்மை கொண்டவர், அவர் சொல்வதைச் செய்வதற்கு முன் யோசிப்பதில்லை. இது அவரது குறும்புத்தனமான பயணங்கள் அனைத்திற்கும் வழிவகுக்கிறது, புத்தகம் முழுவதும் அவரை மிகவும் குறும்புக்கார நாய்க்குட்டியாக இச்செயல்கள் மாற்றுகிறது. அவர் செல்லும் இடமெல்லாம் நகைச்சுவையான மற்றும் பெருங்களிப்புடைய தருணங்களை ஏற்படுத்துவதால், ஸ்பாட்'சி இன் பயணத்தில் நீங்களும் சேருங்கள். இந்த புத்தகம் நாய் பிரியர்களுக்கு சிறந்த வாசிப்பு புத்தகம் ஆகும்.நூலாசிரியர்கள் பற்றி கியாரா சங்கர் அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பதினைந்து வயது எழுத்தாளர் / பாடலாசிரியர் ஆவார். புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதைத் தவிர, அவர் வாசிப்பு மற்றும் கலைப்படைப்புகளை விரும்புபவர். அவரது சமீபத்திய புத்தகங்களான பிரிம்ரோஸின் சாபம் மற்றும் அவகேடோ எனும் ஆமை என்ற இரண்டு புத்தகமும் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தாலியன், பிரெஞ்சு, சீனம், இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.வினய் சங்கர் ஒரு மென்பொருள் நிபுணர், அவர் புத்தகங்கள் மற்றும் பாடல்களை எழுதுவதற்கான தனது மகளின் யோசனையால் ஈர்க்கப்பட்டு, அவற்றை அவளுடன் இணைந்து எழுத முடிவு செய்தார். இருவரின் கூட்டு முயற்சியும் சிறந்த யோசனைகளை உயிர்ப்பிக்க உதவுகிறது.
Visa mer