Om Irma/இர்மா
உலக அரங்கில் அமெரிக்கா மிகப்பெரிய வலிமையானதொரு தேசம். பொருளாதார, ராணுவ ரீதியில் சர்வ வல்லமை பொருந்திய வல்லரசு. இயற்கை வளங்களால் தன்னிறைவு பெற்ற ஒரு நாடு. தொழில்நுட்பத்தில் குளோபல் லீடர். உலகின் தவிர்க்கமுடியாததொரு சக்தி. என்றெல்லாம் பேசப்படுகிறது. அதெல்லாம் எந்த அளவுக்கு உண்மையோ அதே அளவு உண்மை அமெரிக்கா இயற்கைப் பேரழிவுகளால் ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தேசம் என்பதும் கூட. அந்த வகையில் பணி நிமித்தமாக சொந்தநாட்டைப் பிரிந்து அமெரிக்காவின் ஃபிளாரிடா மாகாணத்தில் வசிக்கும் ஒரு சாமானியன் தனது குடும்பத்தோடு இர்மா எனும் பெருஞ்சூராவளியை எதிர்கொண்ட அனுபவம் ஒரு புதினமாகி (நாவல்) இருக்கிறது. "..அமெரிக்காவைப் பற்றி, அந்த நிலப்பரப்பை பற்றி, அங்கே வாழும் மனிதர்களைப் பற்றி, அவர்களின் பாசங்குகளைப் பற்றி, அந்த நிலத்தின் அரசியல், கொள்கை மாற்றங்களைப் பற்றி, அங்கே இந்தியர்களுக்கு இருக்கும் நெருக்கடிகளைப் பற்றி, மூலக் கதையிலிருந்து விலகாமல் கதையினூடே பதிவு செய்துபோகும் நாவலாக இர்மா- அந்த ஆறு நாட்கள் விரிகிறது. அதுவே இந்த நாவலின் சிறப்பம்சமாக கருதுகிறேன். .." - அரவிந்த் சச்சிதானந்தம் (Aravid Sachithanandam), சென்னை
Visa mer