Om Viruppamila Tiruppangal / விருப்பமில்லா திரு
'விருப்பமில்லா திருப்பங்கள்' மாத நாவலாக வெளிவந்தது. கதையின் நாயகன் செல்வம் நல்லவன். படிப்பில் கெட்டிக்காரன். தேர்வு நாளின்போது சக மாணவன் ஒருவனுக்கு உதவி செய்யப்போய் அநியாயமாகத் தண்டிக்கப்படுகிறான். படிப்பு நின்றுபோய் அவனது வாழ்க்கையில் முதல் விருப்பமில்லா திருப்பம் நிகழ்கிறது. அவன் மீது அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த தாய் இறந்து போகிறாள். அதன் பிறகு சென்னைக்குச் செல்லும் செல்வத்தின் போக்கு திசை மாறி தப்புத் தப்பாகவே, கூடா நட்பும், போதை மயக்கமுமாக விருப்பத்திற்குரிய திருப்பம் ஒன்றுமே நிகழாமல் போய் மீளமுடியாத சுழலில் சிக்கிக் கொள்கிறான்.
Visa mer