Om இறுதி எச்சரிக்கை - The Last Warning
1920-30 களிலேயே பௌத்த விடுதியில் தங்கி தனது கல்வியை பயின்று ஆசிரியராக பணியில் அமர்ந்து 1989ல் தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றவர் ஆசிரியர் திரு.மு. கன்னியப்பன் அவர்கள். இளம் வயதிலேயே புத்தர், அம்பேத்கர் மற்றும் பெரியாரின் கோட்பாடுகளை நோக்கி பயணிக்க துவங்கி, 50 ஆண்டுகளுக்கு மேலாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மத்தியில் அறிவு பிரச்சாரம் செய்தவர் . தான் வாழ்ந்த நாட்களில் பாமர மக்களுக்கு எளிதாக விளங்கும் வகையில் பகுத்தறிவு கருத்துக்களை சென்றடைய செய்தார். தெருத்தெருவாகவும், ஊர் ஊராகவும், கால் நடையாய் சென்று மேற்கொண்ட அப்பிரச்சாரங்களின் தொகுப்பே 'இறுதி எச்சரிக்கை' என்ற இந்நூல் . 80, 90 வயதினை கடந்தும் சிறுபிள்ளைகளின் உற்ச்சாகத்தில் சமூகப்பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கும் பௌத்தர்கள், அம்பேத்கர்வாதிகள் மற்றும் பெரியார்வாதிகளின் எண்ண ஓட்டங்களும், எழுத்தின் ஆழமும், பேச்சின் வசீகரமும் கண்டு இன்றைய இளைய தலைமுறை வியந்து தன்னைத்தானே சுய விமர்சனம் செய்துக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. "ஆத்திக மூடர்களாய் வாழும் தன் மனைவி, பிள்ளைகள், பேத்திகள், பேரன்கள் மற்றும் இவர்களைப் போன்ற மனிதர்கள் படித்து சிந்திக்க..." என்பது இந்நூலை பற்றிய நூலாசிரியரின் குறிப்பு ஆகும்! நூல் தொகுப்பாளர் அ.ப. காரல் மார்க்ஸ் சித்தார்த்தர். இவர் 'UNCASTE' or 'Understanding Unmarriageability: The Way Forward To Annihilate Caste' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் ஆவார்.
Visa mer