Om Velum Villum
வீரவேல் முருகனுக்கு உரியது; வல் வில் இராமனுக்கு உரியது. முன்னாள் அறந்திறம்பிய அவுணரை அழித்தது முருகன் வேல்; இரக்கமற்ற அரக்கரை அறுத்தது இராமன் வில். ஆதலால். 'வேலுண்டு வினை யில்லை; வில்லுண்டு பயமில்லை' என்றிருப்பர் நல்லோர். கொடியவரை அறித்து, அடியவரை ஆதரிக்கும் வேலின் செம்மையும், வில்லின் பெருமையும் இச்சிறு நூலால் ஒருவாறு விளங்கும். இந் நூலில் உள்ள கம்பரும் கச்சியப்பரும்' என்னும் கட்டுரை சென்னைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பத்திரிகையில் முதலில் வெளியிடப்பட்டது. அதனை இத்நூலிற் சேர்த்துக்கொள்ள அனுமதியளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தாருக்கு என் மனமார்ந்த நன்றி உரியதாகும்.
Visa mer